Petta Udumalapetta Lyrics and Video| பேட்ட உடுமலைபேட்ட பாடல் வரிகள்

0
413
Petta Udumalapetta

பேட்ட உடுமலைபேட்ட பாடல் வரிகள்:

எங்க ஊரு🌴 மேல வைச்ச பாசம் சொன்னா புரியாது
எங்க ஊரு🌴 போல சொர்க்க ஒண்ணு மண்ணில்🏖️ கிடையாது
இங்க சாயங்கால வீசும்
இள சாரக்காத்தூம் பேசும்
இங்க பச்சத் தண்ணீ கூட ஒரு பதநீ ருசியாகும்😋
இந்த ஊரு எங்க உசிரு
இந்த மக்கள் எங்கள் உறவு
இந்த பேட்ட எங்க கோட்டை
இனி கேளு எசப்பாட்ட

(Music)

பேட்ட
உடுமலைப்பேட்ட
இது பாசத்தக் காட்டுற மக்களோட கோட்ட
பேட்ட
உடுமலைப்பேட்ட இது வீரத்த💪 ஊட்டுற கொங்கு நாட்டுக் கோட்ட
கரும்பு, வெல்லம் விளையுற பூமி
எங்க மண்ணு இனிக்குமடா
இரும்பு உள்ளம் தெறிக்குற வீரம்💪

சீரிப்பாஞ்சா எரிமலைடா🌋🔥
மரியாதையெ கொடுப்போமட
எல்லோரும் எப்போவும் ஜெயிப்போமடா

பேட்ட
உடுமலைப்பேட்ட
இது பாசத்தக் காட்டுற மக்களோட கோட்ட

பேட்ட
உடுமலைப்பேட்ட இது வீரத்த ஊட்டுற கொங்கு நாட்டுக் கோட்ட

(Music)

மேற்குத் தொடர்ச்சி மலைகளின்⛰️🗻 நடுவே சொர்க்கம் ஒண்ணு இருக்குதடா
ஏ.சி. காத்துற வீசுற பூமி, எங்க ஊரு உடுமலைடா
கரண்ட்⚡ பவரு எடுத்துத் தரவே ஊர சுத்தி காத்தாடி
நெசவு தறியில் உழைச்சு நம்ம மானம் காக்கும் பாட்டாளி👨‍🏭
மாரியம்மன் கோயிலிலே தேரோடும் காட்சி
பள்ளிவாசல்🕌 சர்ச்⛪ எங்கள் ஒற்றுமையின் சாட்சி
கொங்கு நாட்டுக் கோடம்பாக்கம் திருமூர்த்தி🧗⛰️🗻 மலட
எங்க ஊரு கவுண்டமணி கலக்கலான தலடா

பேட்ட
உடுமலைப்பேட்ட
இது பாசத்தக் காட்டுற மக்களோட கோட்ட

பேட்ட
உடுமலைப்பேட்ட இது வீரத்த ஊட்டுற கொங்கு நாட்டுக் கோட்ட

(Music)

எங்க ஊரு வளர்ச்சி அடைய பெரியோர் எல்லாம் உழைச்சாங்க
கல்வி கூடம் கட்டித்தந்து மக்கள் மனசில் நின்னாங்க
ஊரு பேர உசத்திக்காட்ட உழைக்கும் இளைய தலைமுறைடா
எந்த ஊரில் இருந்தால் என்ன எங்க ஊரு உடுமலைடா
உடுமலைனா கொங்குதமிழ் ஆட்சி செய்யும் பூமி
உழவர்களே🚜👨‍🌾🌽 எங்களுக்கும் எப்பொழுதும் சாமி
சரித்திரத்தில் எங்க ஊரு சக்கரகிரிக்கோட்ட
வந்தாரை வாழவைக்கும் உடுமலைப்பேட்ட

பேட்ட
உடுமலைப்பேட்ட
இது பாசத்தக் காட்டுற மக்களோட கோட்ட

பேட்ட
உடுமலைப்பேட்ட இது வீரத்த ஊட்டுற கொங்கு நாட்டுக் கோட்ட

கரும்பு , வெல்ல விளையுற பூமி எங்க மண்ணு இனிக்குமடா
இரும்பு உள்ளம் தெறிக்குற வீர சீரிப்பாஞ்சா எரிமலைடா
மரியாதைய கொடுப்போமட எல்லோரும் எப்பவும் ஜெயிப்போமடா
பேட்ட உடுலைப்பேட்ட

இது பாசத்தக் காட்டுற மக்களோட கோட்ட
பேட்ட உடுமலைப்பேட்ட

இது வீரத்தே💪 ஊட்டு கொங்கு நாட்டுக் கோட்ட
எங்க ஊரு மேல வைச்ச பாசம் சொன்னா புரியாது
எங்க ஊரு போல சொர்க்க ஒண்ணு மண்ணில் கிடையாது

பாடலாசிரியர் : கவி கார்க்கோ.

பாடகர் : ஆனந்த்.

Edited Video for Petta Udumalapetta Song: